×

75வது சுதந்திர தின நிறைவுவையொட்டி மாவட்டத்தில் 9 டன் குப்பைகள் அகற்றம்

 

ஊட்டி, ஆக. 14: நீலகிரி மாவட்டத்தில் 75வது சுதந்திர தின நிறைவு விழாவினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒட்டுமொத்த சுகாதார தூய்மை முகாமில் 9 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள் மற்றும் 4 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 75வது சுதந்திர தின நிறைவு விழாவினை முன்னிட்டு எனது தாய்மண் எனது தேசம் என்ற நிகழ்வின் ஒருபகுதியாக ஒட்டுமொத்த சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இச்சுகாதார பணியானது நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட முக்கிய சாலைகளிலும், நீர்நிலை பகுதிகளிலும், வனப்பகுதிகளிலும், சோதனை சாவடிக்கு ஒட்டிய பகுதிகளிலும் மற்றும் இதர முக்கியமான பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டது.

தூய்மை பணியில் நீலகிரி மாவட்டத்தில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் 1178 தூய்ைம காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள், 1607 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், 98 அரசு சாரா தொண்டு நிறுவனத்தினர், 252 மாணவர்களும், 1581 அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் என மொத்தம் 4716 நபர்கள் கலந்து கொண்டனர்.

தூய்மை பணியின் போது 1152 கிலோ பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் 7 ஆயிரத்து 898 கிலோ இதர குப்பைகள் என மொத்தம் 9 ஆயிரத்து 050 கிலோ குப்பைகள் சேகரிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டன. தூய்மை பணியின் போது நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளுர் பொதுமக்களிடையே பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு நீலகிரியை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு அனைத்து தரப்பினரும் முழு ஒத்துைழப்பு அளிக்க வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டது.

The post 75வது சுதந்திர தின நிறைவுவையொட்டி மாவட்டத்தில் 9 டன் குப்பைகள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : 75th Independence Day ,75th Independence Day ceremony ,Nilgiri District ,75th Freedom Day ,Dinakaran ,
× RELATED நீலகிரி மாவட்டத்தில் மலை காய்கறி...